
அம்பாறை, மே 03
புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (03) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை கல்முனை சம்மாந்துறை நிந்தவூர் அக்கரைப்பற்று பொத்துவில் உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
3 வருடங்களுக்கு பின்னர் மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

