புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில் 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் செவ்வாய்க்கிழமை (3) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை கல்முனை சம்மாந்துறை நிந்தவூர் அக்கரைப்பற்று பொத்துவில் உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
3 வருடங்களுக்கு பின்னர் மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் கொரோனா அச்சுறுத்தல் உட்பட இதர காரணங்களினால் பெருநாள் தொழுகை கட்டுப்பாடுகளுடன் நாடுபூராகவும் இடம்பெற்றிருந்தன.
இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை 3 வருடங்களின் பின்னர் சிறப்பாக அனுஷ்டிக்கின்றனர் .
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் ,நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .



மூதூர்
நோன்புப் பெருநாள் திடல் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.மூதூர் அல்-ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தொழுகையை மௌலவி ஏ.ஆர். லத்தீப் ஸலாமி நிகழ்த்தினார்.
இதில் ஆண்கள், பெண்கள் வெவ்வேறாக நின்று நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினர்.
நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம்
இஸ்லாமிய வாழ்மக்கள் இன்று புனித ரம்ழான் தின துவாப்பிராத்தனை நிகழ்வுகளை, யாழ். மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் முக்கிய இடங்களிலும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் யாழ். ஒஸ்மானியக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் புனித றம்ழான் தின துவாப்பிராத்தனைகள் இடம்பெற்றன.
இவ் துவாப்பிராத்தனையும் குப்த பிரசங்கத்தினையும் மௌலவி எ.எச்.ரகீம் தலைமையில் நடாத்திவைக்கப்பட்டது.
இதில் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த இஸ்லாமிய மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



கல்முனை
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனையில் நடைபெற்றது.
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனையில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி சாபித் (ஷரயி,ரியாதி) அவர்கள் நிகழ்த்தினார்.
இங்கு ஆண், பெண்கள் அடங்கலாக இருபாலாரும் நபிவழித் திடல்தொழுகையில் கலந்துகொண்டனர்.



