இந்திய கடன் எல்லை வசதி கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம்

கொழும்பு, மே 03

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியின் கீழான பொருள் ஒதுக்கீட்டில் சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னதாக கைத்தொழில் மற்றும் மூலப்பொருளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கிடப்பட்டிருந்தது.

அது தற்போது, 260 மில்லியன் அமெரிக்க டொலராக சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் , 300 மில்லியன் அமெரிக்க டொலராக ஒதுக்கிடப்பட்டிருந்த உணவுக்கான ஒதுக்கீடு 180 மில்லியன் அமெரிக்க டொலராகவும், சீராக்கம் செய்யப்பட்டுள்ளது.

மருந்து பொருட்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் எரிவாயுவுக்காக 160 மில்லியன் அமெரிக்க டொலரும், எரிபொருளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *