ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளரான தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

தற்போது நாளாந்தம் 3.4 மில்லியன் லீற்றர் எரிபொருள் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக இன்று காலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *