இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்!

<!–

இலங்கை மக்களுக்கு உதவிட நன்கொடை வழங்குங்கள் – ஸ்டாலின் வேண்டுகோள்! – Athavan News

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதல்வர். மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க மத்திய அரசின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எனவே மனிதாபிமான அடிப்படையில்இ இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply