
தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
10 வீத குறைந்த விநியோகக் கட்டணத்துடன் எரிவாயுவை வழங்கவும் குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது.
எனினும் சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.