இலங்கை மக்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ. 1 கோடி நிதி உதவி

சென்னை,மே 03

இலங்கை மக்களுக்கு உதவ தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுமென
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தவிர இலங்கை மக்களுக்கு உதவிட நிதி உதவி வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ மக்கள் நன்கொடையை வழங்கலாம் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply