எல்லைகளற்ற செய்தியாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை பின்னடைவு!

2022 ஆம் ஆண்டுக்கான எல்லைகளற்ற செய்தியாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை 146 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், குறித்த தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எல்லைகளற்ற செய்தியாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு 127 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த ஆண்டு 19 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *