
ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், கடந்தவாரம் ராஜபக்ஷர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதி சபாநாயகர் இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகை தரவில்லை என கூறப்படுகின்றது.
எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.
83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





