எரிபொருள் வழங்குமாறு இந்தியாவிடம் இ.தொ.கா கோரிக்கை!

கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின்வெட்டு காரணமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா முன்வரவேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மேற்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இது தொடர்பில் கலந்துரையாடி இலங்கைக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave a Reply