இன்று சேவையில் ஈடுபட்டுள்ள இ.போ.ச பஸ்கள்

கொழும்பு, மே 06

இ.போ.சவின் அனைத்து பஸ் சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்றைய  தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply