அராஜகத்தை நோக்கி செல்லும் இலங்கை; சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்த சனத்.

இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்ற சர்வதேச சமூகம் உதவுமாறு இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு அறிக்கையில், முன்னாள் கிரிக்கெட் வீரர், மக்களுக்கு ஏற்ற தேசிய நெருக்கடிக்கான தீர்வை உருவாக்க அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் வலியுறுத்தினார்.

இலங்கையில் இன்று நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்று நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், வழக்கமான தனியார் மருத்துவ சேவைகள் கூட நிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மக்களுக்குப் பொருத்தமான தீர்வைத் தயாரிப்பதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.

அவ்வாறு செய்யும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். நாடாளுமன்ற முறை மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்தால் அராஜகம் தலைவிரித்தாடும்.

விஸ் கலீஃபாவை மேற்கோள் காட்ட. “முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது தவறிலிருந்து நாம் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்ள மாட்டோம்.

கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே அது நம்மைத் தாக்கும். மக்கள் தங்கள் ஜனநாயக அபிலாஷைகளை அடைய சர்வதேச சமூகத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply