
அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் வெற்றிலைக்கூறின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெற்றிலைக்கூறு தற்போது 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக வெற்றிலை வியாபாரிகளிடம் கேட்டபோது தற்போது பாக்கு ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாவாகவும் வெற்றிலை 8 ரூபா தொடக்கம் 10 ரூபாவாகவும் புகையிலை 150 ரூபா தொடக்கம் 240 வரையும் விற்பனை செய்யப்படுவதால் வெற்றிலைக்கூறின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.