விசேட அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் நேற்றையதினம் இரவு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ , சமல் ராஜபக்ஸ, ஷசிந்திர ராஜபக்ஸ ஆகியோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் அரச தரப்பிலிருந்து உத்தியோக பூர்வ அறிவிப்பு எவையும் வெளியாகவில்லை.

Leave a Reply