கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் ஆலயத்திற்குள் சடலமாக மீட்பு

கிளி, மே 07

கிளிநொச்சி – செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் என்ற வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.  கிளிநொச்சி  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply