அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தும் அளவுக்கு நாட்டில் என்ன நடந்தது? ஜே.வி.பி கேள்வி

அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தும் அளவு நாட்டில் என்ன நடந்தது என்றே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம் கேள்வி எழுப்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று (7) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்தக்குள் தள்ளிய இந்த அரசாங்கம், வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தாங்கள் விரும்பிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கோரிக்கையையே நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply