இராணுவத்தளபதி நாளை யாழிற்கு திடீர் விஜயம்!

நாட்டின் பல பாகங்களிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நாளையதினம் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யாழிற்கு வருகை தரவுள்ள இராணுவத் தளபதி சில முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் என தெரியவருகிறது.

மேலும் 51 ஆவது படைப்பிரிவில் பொதுநூலகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.

நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *