
வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபரொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் நேற்றையதினம் வயல் காவல் கடமையில் வயோதிபரொருவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வயலுக்குள் நுழைந்த யானையை விரட்டுவதற்காக சென்றபோது அவரை பாம்பு தீண்டிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

