உக்ரைன் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை  மீது ரஷியா தாக்குதல்

உக்ரைன்,மே 08

உக்ரைனின் லூகான்ஸ் பகுதியில் உள்ள பாடசாலை  ஒன்றின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் தொடர் தாக்குதலினால் பொதுமக்கள் குறித்த பாடசாலையில் தஞ்சமடைந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலையில் 90 பேர் வரையில் இவ்வாறு தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பாடசாலை மீது ரஸ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை சேதமடைந்துள்ளதுடன், இதுவரை குறித்த பாடசாலையில் இருந்து 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply