இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை ஈகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்.
அதையொட்டி, மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவருடைய வார்த்தைகளோடு இன்று காலை 10 மணிக்கு பிரதமர் வாசல்ஸ்தலம் முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் போராளி கனி, ஈகை சுடர் எற்றி வைத்தார்.
மேலும், அவருடைய படத்திற்கு மலர் மாலையை முன்னாள் போராளி சுதர்சன் அணிவித்துள்ளார்.





