மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகாமையில் இருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலம் அமைந்துள்ள பகுதில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில், இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டினைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.





