மிரிஹான பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவை வானில் பறக்கச் செய்த இருவர் நேற்று மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹான பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நுகேகொட மணல் பூங்காவில் குறித்த சந்தேக நபர்கள் ட்ரோன் கெமராவை பறக்க விடப்பட்டுள்ளனர்.
மஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ட்ரோன் கெமரா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நபர்களை இன்று கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





