கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் சனிக்கிழமை (25) நல்லடக்கம் செய்யப்பட்ட 11 உடல்களுடன் மொத்த எண்ணிக்கை 3003 ஆக உயர்ந்துள்ளது.
இதனை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இம்மாதம் குறைந்த அளவிலான உடல்கள் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் உடல்களுடன் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளின் உடல்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன என்று தவிசாளர் மேலும் தெரிவித்தார்.





