மாறுவேடத்தில் நடமாடிய பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பல வன்முறை சம்பவங்களை மேற்கொண்டு 2019 ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்த பிரதான நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் மானிப்பாய் பொலிஸாரும் இணைந்து சுதுமலை பகுதியில் வைத்து இவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கொக்குவிலை சேர்ந்த தனுறொக் குறுப்பை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

இவர், உப்புமடம் கோண்டாவில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கோமாவில் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்த வழக்கில் பிரதான சந்தேக நபர் ஆவார்.

மேலும், இவருடை தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரின் உதவியுடன் ஓரிரு மாதத்தில் இலங்கையை விட்டு தப்பிக்க உள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர், மாறுவேடத்தில் உருமாறி நடமாடிய நிலையில், மானிப்பாய் சுதுமலையில் வைத்து இவருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் இரண்டு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றபட்டதுடன், மேலதிக விசாரனைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *