எந்த நேரத்திலும் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்… நாடு பெரும் ஆபத்தில் உள்ளது – கலகொட அத்தே ஞானசார தேரர்
நாட்டில் எந்த நேரத்திலும் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாடு பெரும் ஆபத்தில் உள்ளது என்றும், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் ஜனாதிபதியிடம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஞானசார தேரர் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு இந்த கருத்துக்களை தெரிவித்ததோடு, கலந்துரையாடலின் போது அவர் பல ஆடியோ பதிவுகளையும் வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





