வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்தவகையில் டெல்லியின் முக்கியச் சாலைகள் அனைத்தும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.  பெங்களூரில் 4 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து  தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் ஓடாது என்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply