உடன்படிக்கையைக் கிழித்து எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை பகுதி பகுதியாக செயல்படுத்துகிறது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தேசிய வளங்களை நேசிக்கும் தலைவர்கள் இருக்க வேண்டும் ஆனால், இன்று அத்தகைய தலைவர்கள் இல்லை என்பது துயரமானது.
ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களும் நாட்டின் வளத்தின் ஒரு பகுதியை இந்தியா அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு விற்றுள்ளனர்.
மேலும், MCC ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இப்போது அந்த உடன்படிக்கையை பகுதிகளாகச் செயல்படுத்துவதாகவும் யுகதனவ் மின் நிலையம் அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், சட்டத்துறையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசின் முயற்சிகளை எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





