யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அரியாலையைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

மேலும், ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியர் வீட்டில் ஐபாட், 2 ஐபோன்கள் மற்றும் சவுண்ட் சிஸ்ரம் என்பன திருடப்பட்டன.

இது,தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே இந்நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பன கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *