இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குசுமாந்துறை கடற்கரையில் படகு ஒன்றின் எஞ்சினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எஞ்சின் திருடிய குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்டவருக்கும் எஞ்சினை பறிகொடுத்தவருக்கும் இடையே சிலநாட்களுக்கு முன்னர் முரண்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் அவரது படகின் எஞ்சின் களவாடப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.





