நாவலப்பிட்டியவில் இரு மாடிக் கட்டடமொன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரும் மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும், இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





