தம்புள்ளை- குருநாகல் வீதியில், விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில், 26 மற்றும் 41 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
குறித்த வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அதேவீதியில் பயணித்த லொறியொன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





