வரலாற்று சாதனை படைத்த அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம்!

அண்மையில் வெளிவந்த க.பொ.த. சாதரணதர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் கோட்டத்தின் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் 90 சதவிகித சித்தியினை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இது வவுனியா தெற்கு வலயத்தின் சித்திவிகித அடிப்படையில் இரண்டாம் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாடசாலையான இங்கு, 40 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியநிலையில் 36 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் சைவசமயபாடத்தில் 92 விகிதசித்திகளையும், ரோமன் கத்தோலிக்கம் 100 விகிதம், கிறிஸ்தவம் 100, தமிழ்100, கணிதம்90, விஞ்ஞானம்98, வரலாறு73,ஆங்கிலம்35, சித்திரம்100, புவியியல்100, குடியுரிமை94, தகவல்தொழில்நுட்பம்88, சுகாதாரம்97 விகித சித்தியடைந்துள்ளனர்.

அவர்களை வழிப்படுத்திய அதிபர் ஆசிரியர்களை பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *