
இன்று (27) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இடைநிறுத்தப்பட்ட கொரோனா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்று (27), காலை 07 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் தாதியர்கள் உள்ளிட்ட 40 சுகாதார தொழிற்சங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.




