ஒக்டோபர் மாதம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, துறைகளுக்குப் பொருத்தமான திட்டங்களை குறித்த நிறுவனங்களால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே, ஊரடங்கை நீக்கி நாட்டை திறந்த பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய சுகாதார விதிமுறை தொடர்பில் அனைத்து வழிக்காட்டல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





