கரதமண்டிய பிரதேசத்தில், கணவர் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.
குடும்பச் சண்டையே இந்த கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதில், எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
இப் பெண்ணை, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளமையுடன், துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நபரை, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


