எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு நிறுவனத்தின் வசமாகும்!

‘கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்திக் கட்டுப்பாடு மிக விரைவில் வெளிநாட்டு நிறுவனத்தின் வசமாகும் ஆபத்துள்ளது – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

‘உலகின் வேறு எந்தவொரு நாடும் இயற்கை வாயு விநியோக விலைமனு மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை ஒன்றிணைப்பதில்லை. அத்தகைய நடைமுறையைப் பின்பற்றினால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மாத்திரம் அல்லாது, நாட்டையே தன்வசப்படுத்துவதற்கான இயலுமை அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

2035ஆம் ஆண்டு முழுமையாக மின்சார சபைக்குச் சொந்தமாகவுள்ள கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தை உரிய விலை மனு நடைமுறைக்கு மாறாக, சூம் ஊடாக நள்ளிரவு வேளையில் அமெரிக்க நிறுவனத்திடம் கையளிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை அமைச்சரவை மௌனம் காத்ததற்கான காரணம் என்ன?. அமைச்சரவை மௌனம்காத்த குற்றத்திலிருந்து விடுபட முடியாது’ – என்றார்.

Leave a Reply