
லங்கா சதொசாவுக்கு சொந்தமான 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப் பூண்டு அடங்கிய இரண்டு கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் நம்பிக்கை மீறல், தகவலை மறைத்தல் மற்றும் துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக பொருள்களை விடுவித்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

