மருதமுனை பிரதேச வைத்தியசலையில் கடமையாற்றும் சுகாதாரர பணியாளர்கள் இன்று (27) வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு சேவையாற்றும் தமக்கு,கொரோனா காலகட்டத்தில் கடந்த 6,7,8 ஆம் மாதங்கள் வழங்கப்பட்ட 7500 ரூபா கொடுப்பனவு ஆகஸ்ட் மாதம் 31 திகதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்தக் கொடுப்பனவை நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இருக்கும் வரை தொடர்ந்து வழங்க வேண்டும்.
அத்துடன் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவுகள், முறையான மேலங்கிகள், பாதுகாப்பான முகக்கவசம் மற்றும் Covid-19 விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படாமல் அரசாங்கம் கவனயீனமாக செயற்படுகிறது.
இவற்றை தொடர்ந்து வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி இவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சரியான தீர்வை அரசாங்கம் தராவிட்டல் நாடு பூராகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களுடன் இணைந்து எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.
குறித்த இந்த ஆர்பாட்டம் காரணமாக இன்று (27) காலை 7.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணிவரைக்கும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சேவைகள் தடைப்பட்டு காணப்பட்டன.


