
வீதியில் உலரவிடப்பட்ட மீன்வலையில் சிக்கி, நான்குமாதங்களான கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டுக்கொட்டு, ஜீவபுரம், ஜிம்றோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் மீன்பிடி வலைகளைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாது வீதிகளில் உலர விடுகின்றமையால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நேற்றுமுந்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர், வீதியில் உலரவிட்டிருந்த வலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்து, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து மீன்பிடி வலைகளை வீதியில் உலர விடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




