மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சஜித்

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

அம்பாறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள முடியும்.

மக்களின் கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் மக்களின் எண்ணத்தை அறிந்துகொள்ள முடியும்.

சர்வதேசத்திடம் சென்று, தேர்தலை நடத்துவதாக போலி உறுதிமொழிகளை வழங்க வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply