முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் கீழ் இயங்குகின்ற ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்திற்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கடந்த வெள்ளிக்கிழமை(24) மாலை 4மணியளவில் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த களவிஜயத்தின் போது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தரம், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பதில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜாமினி சசீலன் மற்றும் பிராந்திய விவசாயப் போதனாசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த விவசாய விவசாய பயிற்சி நிலையத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.
மேலும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்துறை சார்ந்த இடங்களிற்கும் களவிஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





