நியூசிலாந்து பிரதமரின் வருங்கால கணவருக்கு கொரோனா

வெலிங்டன், Nk 09

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இவரது வருங்கால கணவர் கிளார்க் கேபோர்டு. இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்கிறார். இதை பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். ஜெசிந்தாவும், அவரது 3 வயது குழந்தையும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே அந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ.5 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply