ரஷிய விண்வெளி மையத்தில் இங்கிலாந்து ‘யூடியூப்’ ஆர்வலர் கைது

லண்டன், மே 09

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர், யூடியூப் ஆர்வலர் பெஞ்சமின் ரிச். இவர் கஜகஸ்தானில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது பற்றி விசாரணை நடத்தப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலினா செலியுபா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷிய விண்வெளி அமைப்பு ரோஸ்காஸ்மாஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் கூறும்போது, “இருவரும் கஜகஸ்தான் தலைநகர் நூர்சுல்தானுக்கு தென்மேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ள பைகானூரில் உள்ள உள் விவகாரத்துறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

பெஞ்சமின் ரிச்சின் யூடியூப் சேனலை 35 லட்சம் பேர் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *