வவுனியாவில் 20 பேருக்கு தொற்று உறுதி!

வவுனியாவில் கொரோனா தொற்று 20 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (26) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 20 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் அண்மைய நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்து செல்கின்றது. நேற்றுமுன்தினம் வெளியாகிய முடிவுகளில் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply