
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைக்கால அரசாங்கம் அமைக்கும் பணிகள் கொழும்பு அரசியலில் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே முன்னாள் சபாநாயகரான கரு ஜயசூரியவை பிரதமராக்குவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
கரு ஜயசூரிய பிரதமராக வருவதற்குப் பல கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பதவிவிலகி கரு ஜயசூரியவை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் நேற்றுமுன்தினம் இணக்கம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

