நாட்டில் ஒரு புதிய வகை நில அபகரிப்பு நடைபெற்று வருவதாகவும் அதற்கு பாணம பிரதேசம் பலியாகிவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நில அபகரிப்பு குறித்து கேள்விப்பட்டவுடன் அது தொடர்பாக ஆராய பாணமவில் உள்ள ஸ்ரீ போதிருக்காராமயவுக்கு விரைந்து சென்றுள்ளார்.
இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்,
நாட்டின் உள்நாட்டு வளங்களை துட்சமாக மதித்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம், மறுபுறம் அப்பாவி பொதுமக்களின் நிலங்களை சூறையாடுவதையும் ஊக்குவிக்கின்றது.
அரசியல் அதிகாரம் இருப்பதற்காக, பணத்திற்காக யாரும் இந்த நிலங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது.
அரசாங்கம் நாட்டை ஒரு மோசமான நிலைக்கு தள்ளுகிறது. காட்டுச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த கொள்ளைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஊவா வெல்லஸ்ஸ சங்கத்தின் இருபிரிவினதும் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய பாணம ஸ்ரீ சந்திரரத்ன தேரரையும் இன்றைய தினம் சந்தித்து ஆசியைப் பெற்றுள்ளார்.
அத்துடன் அங்கு சமூகமளித்திருந்த கிராமவாசிகளை சந்தித்தித்தும் கலந்துரையாடியுள்ளார்.





