
கொழும்பு, மே 09
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவிலக வேண்டாமெனக் கோரி அலரி மாளிக்கைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, பிரதமருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் அலரி மாளிகையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் பிரதமர் பதவி விலகப்போவதாக தகவல்கள வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

