மாத்தளை நாவுல பொலிஸ் பிரிவுக்கு மோரகொல்ல பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மோரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவாறே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக தம்புளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

