மட்டக்களப்பு, வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நபர்கள், 26 மற்றும் 44 வயதுடைய வாழைச்சேனை மற்றும் வத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 44 வயதுடைய நபர் கொழும்பு பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்து பிறைந்துரைச்சேனை பிரதேச வியாபாரிக்கு கொடுக்க முற்றப்பட்ட போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதோடு முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது


