
வாகன இறக்குமதிக்கட்டுப்பாடு டிசம்பரின் பின்னர் தளர்வு!
நாட்டில் தற்போது வாகன இறக்குமதிïக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானம் ஒன்றை எடுக்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நேற்று இணையவழி ஊடாக நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வாகன இறக்குமதிக்குத் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரை தொடரும். அதன்பின்னர் ஆராயப்பட்டு தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.
தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தக்கவைத்துக் கொள்ள எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் ஒட்டுமொத்தமாகத் தளர்வுகளை மேற்கொண்டால் மீண்டும் பிரச்சினைகள் வரலாம். இந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு எமக்குக் கால அவகாசம் தேவை. இந்த நடவடிக்கைகள் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும். – என்றார்.




